வேலூர்=25
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபர் க்ரைம் காவல் நிலையமும், சைபர் செல் பிரிவும் இயங்கி வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தொலைந்துபோன செல்போன்கள் தொடர்பான புகார்கள், அந்தந்த பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் பெறப்படுகிறது. மேலும், அந்தந்த காவல் நியைங்களின் மூலமாகவே இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேலும் அதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கும் CEIR-Portal (Central Equipment Identity Register) என்ற வளைதளத்தின் வாயிலாக, செல்போன்கள் குறித்த இருப்பிட தகவல்கள் பெறப்பட்டு, அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் CELL TRACKER எனப்படும் வாட்ஸ்அப் உதவி எண் வழங்கப்பட்டு, அதன் மூலம் தற்காலிக புகார்கள் பெறப்பட்டு, செல்போன்களின் இருப்பிடங்களை கண்டறிந்தும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட இரண்டு முறைகளின் மூலமாக, இதுவரை சுமார் ரூபாய். 2,54,92,400/- (இரண்டு கோடியே ஐம்பத்து நான்கு இலட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்தி நாணூறு) மதிப்புடைய 1,324 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நா.மதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று 24.10.2024-ம் தேதி எட்டாம் கட்டமாக, மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் பெறப்பட்ட 612 புகார்களில், CELL TRACKER மூலம் சுமார் ரூபாய். 17,50,000/- (பதினேழு இலட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்புடைய 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், CEIR PORTAL மூலம் சுமார் ரூபாய்.20,50,000/- (இருபது இலட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்புடைய 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தமாக ரூபாய்.38,00,000/- (முப்பத்தெட்டு இலட்சம்) மதிப்புடைய 200 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதுவரை மொத்தமாக, சுமார் ரூபாய். 2,92,92,400/- (இரண்டு கோடியே
தொன்னூற்றிரண்டு இலட்சத்து தொன்னூற்றிரண்டாயிரத்து நானூறு) மதிப்புடைய
1,524 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது