நாகர்கோவில் செப் 10
குமரி மாவட்டம் தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 30-வது ஆண்டு புதிய மாணவ, மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் அஜய் ஆனந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஸ்பென்சர் பிரதாப்சிங் வரவேற்புரை வழங்கினார். இக்கல்லூரியின் நிதி காப்பாளர் சுந்தர்சிங் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வாழ்த்துரை வழங்கி பேசும் போது கூறியதாவது:-
தோவாளை பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரியானது, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களின் வசித்து வருகின்ற விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் குழந்தைகள் பொறியியல் பயில்கின்ற விதத்தில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 30-வது ஆண்டாக முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்களுடன் வந்துள்ளீர்கள். பெற்றோர்கள் இக்கல்லூரியில் உள்ள போராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக தான் இக்கல்லூரி நிர்வாகம் இவ்விழாவிற்கு மாணவர்களுடன் பெற்றோர்களையும் அழைத்துள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் போராசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், அது போன்று இக்கல்லூரியில் பயில்கின்ற மூத்த மாணவ, மாணவிகளிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் விதத்தில் அறிவுறுத்த வேண்டும். இக்கல்லூரியில் பயில்கின்ற மாணவ, மாணவிகள் பல ஆண்டுகள் கழித்து உயரிய பதிவிகளை அடைகின்ற போது, தாங்கள் பயின்ற கல்லூரியினை நினைவு கூற வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தவறான எண்ணங்களுக்கு செல்லாமல் போராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெறுமைபடுகின்ற விதத்தில் நல்ல முறையில் படித்து நாட்டின் பல பகுதிகளில் உயரியப் பதவிகளை அடைய மனமார வாழ்த்துகிறேன் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சி.எஸ்.ஐ பேராய செயலாளர் பைஜு நிசித்பால், கன்னியாகுமரி சி.எஸ்.ஐ பேராய பொருளாளர் ஜெயகர் ஜோசப், எளியோர் நலத்துறை இயக்குனர் லாரன்ஸ் மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், கிழக்கு மவாட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, மேலும் இக்கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.