ஆம்பூர்,ஜூலை.24-
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஓம் சக்தி நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி சூலத்திற்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து வழிபட்டனர்.
ஓம் சக்தி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீச்சட்டி ஏந்தி வீராங்குப்பம் கிராமத்தில் உள்ள 11 கோயில்களுக்கு பம்பை மேலத்துடன் கஞ்சி அமுது சுமந்து தீச்சட்டி ஏந்தி திருவீதி உலா சென்று ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஓம் சக்தி ஆலயத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.