அண்ணாகராம் ஜன 26
அண்ணாகராம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் மூலம் புத்தாடைகள் மற்றும் ஸ்கூல் கிட் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், செல்வி, இளநிலை உதவியாளர் சிவராமன், சுப்பிரமணியன், கணக்காளர் சரவணன், சீஷா தன்னார்வலர் செந்தில், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னிந்திய மேலாளர் டாக்டர் சார்லஸ் நன்றி கூறினார்.
சீஷா தொண்டு நிறுவனம் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த 21 ஆண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய பலதரப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், மறுவாழ்வு போன்றவற்றின் மூலம் சேவை செய்து வருகிறது. மேலும் சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், வாலிபர்கள், முதியோர்கள் பல மாநிலங்களில் பயன்பெற்று வருகிறார்கள். குறிப்பாக
கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமத்தை சுற்றியுள்ள சாலைநகர், கோழிப்பாக்கம் , கீழ்க்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு, பாபு குளம், கொங்கராயனூர், ஆண்டிபாளையம், மேல்குமாரமங்கலம், பக்கிரிப்பாளையம், மாளிகைமேடு மற்றும் வடக்கு பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.