நாகர்கோவில் ஜூன் 4
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுதோ்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 4 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்குகள் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 6 அறைகளில் எண்ணப்படுகின்றன. ஒரு அறைக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் தனியாக மற்றொரு அறையில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். தோ்தல் முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்று வாரியாக முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணுவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தொகுதிக்கான தபால் வாக்குகள் 20 மேஜைகளிலும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான தபால் வாக்குகள் 3 மேஜைகளிலும் எண்ணப்படுகிறது.