தக்கலை , நவ- 28
தக்கலை பகுதியில் சாலைகளில் காணப்படும் குண்டு குழிகளை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக அறிவித்தது. அதன்படி நேற்று காலை மேட்டுக் கடை பகுதியில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என போலீசார் கூறினார். மேலும் ஊர்வலம் செல்ல தடை விதித்தனர்.
ஆனால் அதனை மீறி தேமுதிக -வினர் ஊர்வலமாக சென்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்து. தக்கலை பஸ் நிலையம் வந்ததும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 20 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தக்கலை ஒன்றிய செயலாளர் கிரிஸ்டோபர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.