திண்டுக்கல் மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளபட்டி ஊராட்சி திண்டுக்கல் மேற்கில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர்
ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் ஆறுமுகம்,செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார், சாமிநாதன்,வருவாய்த்துறை நிர்வாக அலுவலர் விஜயராகவன், கணக்காளர் முருகானந்தம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
பழைய பேருந்து நிலையத்தை சுற்றி பள்ளிகள், பூ மார்க்கெட், காய்கறி சந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.எனவே பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என திண்டுக்கல் வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாலாஜி பவன் ராஜ்குமார், ஆச்சீஸ் வெங்கடேசன் உட்பட பல்வேறு தரப்பு பொதுமக்கள் கோரிக்கையை செய்தியாளர்களிடம் முன் வைத்தனர். மேலும் பள்ளபட்டி ஊராட்சியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளதால் குடிநீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு,கட்டிடம் கட்டினால் அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என பல்வேறு காரணங்களால் தங்கள் தொழிலை நடத்த முடியாது என கூறி 80% பொதுமக்கள் எதிர்ப்பும் 20% பேர் வரவேற்பும் அளித்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்கள். பின்பு பேசிய மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் திண்டுக்கல் மாநகராட்சி பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. மாநகராட்சியை விரிவுபடுத்த வேண்டியது கட்டாயம் என பேசினார்கள்.