போடி அக் 22:
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆலோசனையின் பேரில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் பசுமையை போற்றும் விதமாக போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியில்
போடிநாயக்கனூர் நகர் மன்ற தலைவர் திருமதி ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் போடி முந்தல் சாலையில் உள்ள நகராட்சிக்கு பாத்திய பட்ட இடத்தில் பனைமர விதைக்களை நட்டு வைத்து துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர் திருப்பதி நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் மற்றும் 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.