மதுரை விளாங்குடியில் 15 ஆண்டு காலமாக எல் கே ஜி முதல் 12 ம் வகுப்பு வரை ஹிந்தி, அபாகஸ், பரதம் என்று சுமார் 200 மாணவ, மாணவிகளை கொண்டு சிறப்பாக நடத்தி வரும் விருக்ஷா அகாடமியின் ஆருத்ரா நாட்டிய சபா நிறுவனர் உமா லட்சுமி மற்றும் இன்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பாக பரதம் ஆடிய மாணவர்களுக்கு பரதம் கற்றுக் கொடுத்த குரு மருதாம்பாள் அவர்களுக்கும் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மதுரை மாவட்ட அமைப்பின் சார்பாக
மதுரை மாவட்டம் விளாங்குடியில் உள்ள புஷ்பகவி அரங்கத்தில் மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் எட்வர்டு, ஜெயகுமார், மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து விருது வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பரதம், ஆடல், பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றியவர்களை கெளரவ படுத்தினர். இதில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.