ராமநாதபுரம், டிச.8-
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சேமனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு
துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கதிரவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதக்காதவதி குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் வரவேற்றார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் பரமசிவம் ,பிரதீப் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் 500க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கி மாத்திரை மருந்துகள் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிறப்புற செய்து இருந்தனர்.