சேலம் ஜூலை 02 –
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு கிராம சபை கூட்டம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாழிக்கல்பட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு கனவு திட்டமான கலைஞர் கனவு இல்ல திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து திட்டத்திற்காக அங்கீகாரம் பெறும் வகையில் அனைத்து கிராம சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் நாழிக்கல்பட்டி ஊராட்சியில், ஊராட்சி தலைவர் லட்சுமி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 3.5 லட்சம் செலவில் கனவு இல்ல திட்டம் ஒரு பயனாளிக்கும் , 2004 – 25 ஆண்டிற்கு பழைய வீட்டை புதுப்பிக்க 13 பயனாளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடு பராமரிப்பு தொகையாக குறைந்தபட்சம் 70 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சரவணன் ஊராட்சி துணைத் தலைவர் பூபதி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.