தேனி அக் 06:
தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியில் பூங்கொடி என்பவர் சர்க்கரை நோயுடன் வசித்து வந்திருக்கிறார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்க்கரையின் அளவு கூடிய நிலையில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த நிலையில் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தாகிவிடும் உடனடியாக இடது காலை அகற்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி இருக்கின்றனர். அதன்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அதன் பின்னர் ஒரு கால் இழந்து மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில்
தேனீக்கள் அறக்கட்டளை அமைப்பினை அறிந்து தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் உடனடியாக தேனீக்கள் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாலோசித்து செயற்கை கால் வழங்க திட்டமிட்டனர் அதன்பின்னர் நிர்வாகிகளான அழகேசன்,ரஞ்சித் குமார், ராம் செந்தில், போட்டோ பாண்டி ஆகியோர் அறக்கட்டளை சார்பில் வீடு சென்று இடது செயற்கைக் காலை வழங்கி அப்பெண்மணியை நெகிழ்ச்சி அடைய செய்தனர்.