திருப்பூர் செப்டம்பர் :28
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது, அதன் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக, இன்று 27.09.2024 திருப்பூர் இரயில் நிலையத்துடன் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தூய்மையே சேவை திட்டத்தில் இணைந்து பல்வேறு பகுதிகளில் தூய்மை செய்ய வேண்டும். அனைவருக்கும் தூய்மை செய்யும் எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றார். தற்போது மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், அதை அறவே தவிர்க்க வேண்டும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மது கார்த்திக், செர்லின், திவாகர், கவியரசு ஆகியோர் தலைமையில் தூய்மையை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . பிளாஸ்டிக்கினால் ஏற்படும் விளைவுகளை புலிகள் வேடமணிந்து தத்துருபமாக நடத்திக்காட்டினார்கள். முன்னாள் சேலம் கோட்ட உறுப்பினர் சுரேஷ்குமார், அதிகாரிகள் மற்றும் பயணிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.