மதுரை நவம்பர் 16,
மதுரை மாவட்ட அளவிலான 2024-2025
கலைத் திருவிழா போட்டிகள்
மதுரை OCPM மேல்நிலைப் பள்ளியில்
பள்ளிக் கல்வித் துறை சார்பாக
நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
பார்வையிட்டார்கள். உடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 2024 2025-ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு (1-2), (3-5), (6-8), (9-10) மற்றும் (11-12) என 5 பிரிவுகளில் 7 வகையான கலை இனங்களில் (கவின்கலை, இசை, கருவியிசை (துளை காற்றுக்கருவி, தந்திக்கருவி, தோற்கருவி) நடனம், நாடகம்) 30 வகையான போட்டிகள் பள்ளி, குறு வளமைய மற்றும் வட்டார அளவில் நடைபெற்றது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறு வளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற 3790 மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான போட்டிகள் 15.11.2024 மற்றும் 16.11.2024 ஆகிய நாட்களில் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி (11-12), ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (9-10), LPN பெண்கள் மேல்நிலைப்பள்ளி (6-8) மற்றும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கடையில் (1-2,3-5) நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு தமிழக அரசின் சார்பில் கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.