கொல்லங்கோடு, பிப்- 27
கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு காவல் நிலைய வாகனகத்தில் போலீஸ்காரர் ஒருவர் ஊரம்பு நோக்கி வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது கச்சேரி நடை என்ற இடத்தில் வைத்து ஒரு பயணிகள் ஆட்டோவில் சீட்டின் மேல் பிளாஸ்டிக் பையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்து உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது மூடைக்குள் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துக் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோவையும், டிரைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மீனவ கிராமத்திலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்திக் கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆட்டோவில் 300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது. ஆட்டோவை கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த விக்டர் ( 64) என்பவர் ஓட்டி வந்தார். இதை அடுத்து ஆட்டோ, ரேஷன் அரிசி மற்றும் டிரைவரை நாகர்கோவில் புட் செல் போலீசாரிடம் கொல்லங்கோடு போலீசார் ஒப்படைத்தனர்.