சுசீந்திரம்.டிச.15
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் தாணுமாலயசுவாமி கோவில் உட் பிரகாரம் அமைந்துள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுடைய ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி வருகின்ற 29ஆம் தேதி துவங்கி 30ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 29ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகமும் காலை 10:30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கால பைரவர் சுவாமிக்கு தீபாரதனை நடக்கிறது ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவான 30 ம் தேதி காலை 5 மணிக்கு ராமபிரானுக்கு பால் பன்னீர் திருநீறு சந்தனம் குங்குமம் பஞ்சாமிர்தம் பழச்சாறு கரும்புச்சாறு எலுமிச்சைச்சாறு உட்பட பதினாறு வகையான பொருட்களால் ஜோடச அபிஷேகமும் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1000 லிட்டர் பால் தயிர் நல்லெண்ணெய் வெண்ணெய் இளநீர் எலுமிச்சை அரிசி மாவு பழச்சாறு கரும்புச்சாறு குங்குமம் சந்தனம் களபம் ஜவ்வாது திருநீறு தண்ணீர் தேன் உட்பட 16 விதமான பொருட்களால் ஜோடச அபிஷேகம் நடைபெறுகிறது மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாரதனை மாலை 6:00 மணிக்கு நறுமண மிக்க பூக்களால் சுவாமியின் கழுத்து வரை புஷ்ப அபிஷேகம் நடைபெறுகிறது இந்த புஷ்ப அபிஷேகத்தில் வாடாமல்லி கிரேந்தி உட்பட மனம் இல்லாத மலர்கள் சேர்த்துக் கொள்வது இல்லை அதன் பின்பு இரவு 9 மணி அளவில் அலங்கார தீபாரதனை நடைபெறுகிறது ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு ஒரு லட்சம் லட்டு தட்டுவடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று வரும் பக்தர்களுக்கு லட்டு, தட்டு வடை,சந்தனம்,குங்குமம் திருநீறு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ஜான்சி ராணி, பொறுப்பு தலைமையில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.