கந்திலி:அக்:14, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் MRB மனோகரன் ரஞ்சிதம் தொழில் நிறுவனத்தில் ஆயுத பூசை கொண்டாடினர். இளம் தொழில் அதிபர் நெப்போலியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், செல்லரப்பட்டி திமுக செயலாளர் பெருமாள், கவுண்டப்பனூர் ஒன்றிய கவுன்சிலர் சக்ரவர்த்தி, நக்கினாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் தொழிலாளர்களுக்கான நல வாரியம் அமைப்பது, தொழில் சார்ந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, மகப்பேறு, கல்வி உதவித்தொகை, ஈமச் சடங்கு நிதி, சாலை விபத்து என பல்வேறு நல திட்டங்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விளக்கினர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இவ்விழாவில் MRB மனோகரன் ரஞ்சிதம் குடும்பத்தினர் நெப்போலியன், இந்துமதி, நிவாஷினி, நித்திஷ் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் லக்கினாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், ஐஸ்வர்யம் கம்பிகள் நிறுவனத்தார், நல வாரிய அலுவலர் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
MRB தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூசை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics