போகலூர், ஆக.16-
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் இந்திரா நகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் இந்திரா நகரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சியில் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், இணையவழி வரிசெலுத்தும் சேவை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். ஊராட்சி செயலாளர் ராஜகோபால் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விரிவாக மக்கள் மத்தியில் வாசித்துக் காண்பித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். போகலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆய்வு செய்து கூட்டத்தில் பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலர் இன்ஃபன்ட் அஸ்வின் பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அறியக்கூடிய புத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.