சங்கரன்கோவிலில் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஶ்ரீ குமார் பங்கேற்றனர்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, சாகுல், மற்றும் கே எஸ் எஸ் மாரியப்பன்,மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல்கார்த்தி , ராஜ் , வாழைக்காய் துரைப்பாண்டியன்,
,நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார் புஷ்பம் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நகர வார்டு பொறுப்பாளர்கள் கவுன்சில ர்கள்பலர் கலந்து கொண்டனர்