வேலூர் 17
வேலூர் மாவட்டம் ,தேசிய அளவிலான 11வது பஞ்சாயத்து யுவ கிருத கேல் அபியான் வில்வித்தை சாம்பியன்ஷிப்போட்டி 2024 ராஜஸ்தான் மாநிலம் புகானாவில் கடந்த”08.12.2024 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வகையான போட்டிகள் நடைப்பெற்றது. இதில் 8 மாநிலங்களில் இருந்து 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக 98 பேர் கலந்துகொண்டனர், இதில் குடியாத்தம் ஆசிர்வாத் இண்டர்நேஷ்னல் சீனியர் செகண்டரி பள்ளியைச் சார்ந்த சாய் ஸ்ரீனிக் கிருஷ்ணா ,தஷ்யன்,தூஷினி ,சரிணி,சஞ்சனா ,தேவநாத் ,நதீஷ் ,
ஆகிய மாணவ−மாணவிகள் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசிய பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சந்தீப் செளத்ரி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்களிடம் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர் . உடன் பள்ளியின் தாளாளர் மஞ்சுநாத் மற்றும் பள்ளியின் முதல்வர் பிரமிளா கண்ணன் ஆகியோருடன் உடல் கல்வி இயக்குநர் விஜயன் மற்றும் பயிற்சியாளர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்