ஈரோடு அக். 4
ஈரோட்டை அடுத்த துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் தலைவர் பேபி தலைமையில் நடந்தது .துணைத் தலைவர் ஸ்ரீரங்கன் முன்னிலை வகித்தார். செயலர் தியானேசுவரன் வரவேற்றார்
கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழை தலைவர் பேபி வழங்கினார். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு விளக்கு வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தலைவர் பேபி தலைமையில் துணை தலைவர் செயலர் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.