திண்டுக்கல்
ஜூலை :01
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவித்த அரசுக்கு பாராட்டு விழா சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்த அரசனை பாராட்டும் விதமாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள டெஃபி வூசு அகாடமி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர் டாக்டர். நாட்டாண்மை
என்.எம்.பி. காஜாமைதீன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மனிதநேயம் வி. ஞானகுரு வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர்கள் திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ஏ.ராஜேந்திரகுமார், சமூக சேவகர் டாக்டர். எஸ். சகாய செல்வராஜ், ஏ.சீனிவாசன்,
செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், எஸ்.அரியநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியின் போது தேசிய அளவிலான வூசு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர் ,வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அதில்
தேசியஅளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் வூசு லீக் போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகவதி நகர் உள்விளையாட்டு அரங்கத்தில் மார்ச் மாதம் 26- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ரேஷ்மி, ரேஹிதா, கங்கா வர்ஷினி, நிவேதாஸ்ரீ மற்றும் தீரா கலந்து கொண்டனர். இதில் ரேஷ்மி வெண்கல பதக்கம் வென்றார்.ராஞ்சியில் நடைபெற்ற 7- வது பெடரேஷன் கப் போட்டியில் சுபஸ்ரீ வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற
அகில இந்திய யுனிவர்சிட்டி வூசு போட்டியில் யஷ்வந்த் சஞ்சய் கலந்து கொண்டு ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.பீகார் பாட்னாவில் நடைபெற்ற 22- வது தேசிய ஜூனியர் வூசு போட்டியில் கலந்து கொண்டு ஜீவா மற்றும் ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர். இவர்களை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர். நாட்டாண்மை
என்.எம். பி. காஜாமைதீன், திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ஏ.ராஜேந்திரகுமார், டாக்டர்.எஸ்.சகாய செல்வராஜ், ஏ.சீனிவாசன்,
செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகளை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் பொருளாளர் மாஸ்டர் கே. ஆர்.ஜாக்கிசங்கர் நன்றி கூறினார்.