நாகர்கோவில் ஜூலை 15
கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளராக இந்திய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றுள்ள
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்
தாரகை கத்பர்ட் ஆகியோருக்கு
மார்த்தாண்டம் மறை மாவட்ட மேதகு ஆயர் வின்சன்ட் மார்பவுலஸ், கன்னியாகுமரி மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் ஆயர் செல்லையா மற்றும் சால்வேஷன் ஆர்மி போன்ற துணை திருச்சபைகளின் போதகர்கள் சார்பாக நாகர்கோவில் ஆயர் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.