ராமநாதபுரம், ஆக,7-
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி 15 ஆண்டுகளாக பணி புரிந்த நிலையில் புல்லங்குடி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதலாகி சென்றார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ரங்கநாயகி தலைமை வகித்தார். என்எம்எம்எஸ் பயிற்சியாளர் மோகன், கவிஞர் ராமநாதன், கல்வியாளர் சௌந்தரபாண்டியன், ஆசிரியர் ராமேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவி சூர்யகுமாரி நன்றி கூறினார்.