சென்னை ஜூன்- 27, எஃப் ஐ ஐ டி ஜே இ இ ( ஃபிட்ஜீ ) பயிற்சி மையத்தில் பயின்று மே மாதம் நடந்த ஜே.இ.இ 2024 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா சென்னை சேத்துபட்டு மஹரிஷி வித்யா மந்தீர் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்..
சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பாராட்டு விழாவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிரப்பட்டது. விழாவில் பங்கேற்ற பயிற்சி நிர்வாக இயக்குனர் ஆங்கூர் ஜெயின், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த விதம் குறித்து விளக்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் பிரணவ் மைலரசு பிட்ஜி நிறுவனம் எங்களை தேர்வுக்கு முழு வீச்சில் தயார் செய்ததாகவும் பெற்றோர் ஆசிரியர்கள் ஒத்துழைத்ததாகவும் கூறினார்..