சங்கரன்கோவில்.ஜூலை.26.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் தேர்தலுக்காக சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கான பாராட்டு விழா ரயில்வே பீடர் சாலையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன் , பரமகுரு , மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசும், பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மதிமுக சுதா பாலசுப்பிரமணியன், சிபிஎம் முத்துப்பாண்டி, சிபிஐ இசக்கிதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லிங்கவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பட்டாணி, ஆதித்தமிழர் கட்சி தென்னரசு, பார்வேர்ட் பிளாக் சுப்பிரமணியன், மக்கள் விடுதலைக் கட்சி சக்திவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகைதீன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர் பூலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள் சாமி ,திமுக மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா,ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன் , பொன்முத்தையாபாண்டியன் , பெரியதுரை, கடற்கரை, பூசைப்பாண்டியன், சேர்மதுரை , கிறிஸ்டோபர் , ராமச்சந்திரன், வெள்ளத்துரை , குணசேகரன், பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, சாகுல் ஹமீது,நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, குருசாமி, சேது சுப்பிரமணியன், மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.