கிருஷ்ணகிரி நவ 16: தமிழக கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தினவிழா சென்னையில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கங்காவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், வருகை பதிவேடு, பள்ளி சுகாதாரம், மாணவர்களின் கல்வி தேர்ச்சி, உள்ளிட்ட அனைத்திலும் சிறந்தப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.ஜோனா மேரி அவர்களிடம் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில்பொய்யா மொழி
கேடயத்தினை வழங்கிப் பாராட்டினார்.
அப்போது தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளிகல்வித் துறை
இயக்குனர், ஆகியோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சரிடம் கேடயம் பெற்றுக் கொண்ட பள்ளி
தலைமை ஆசிரியர் ஜோனா மேரி, வட்டார கல்வி அலுவலர் முன்னால் பள்ளி மேலண்மை குழுத் தலைவி குப்பம்மாள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் நந்தினி, ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன், ஒன்றிய கவுசிலர் ரமேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கிராமமக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.