தேனி செப் 05:
தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி மூன்று நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழங்கினார் புதுடெல்லி உச்சநீதிமன்றம் கடந்த 2 7 2024 வழங்கிய தீர்ப்பின்படி பகுதி நேர ஊழியராக இருந்த மாற்றுத்திறனாளிகளான பி குமார் ஆர் மாரியப்பன் ஆர் கார்த்திக் ஆகியோரை அலுவலக உதவியாளர்களாக பணி நியமனம் செய்ய ஆணையிடப்பட்டது இதன் அடிப்படையில் அலுவலக உதவியாளர் மாவட்ட ஆட்சியரகம் தேனியில் அலுவலக உதவியாளர் வட்டாட்சியர் அலுவலகம் உத்தமபாளையதத்திலும் அலுவலக உதவியாளர் வட்டாட்சியர் அலுவலகம் பெரியகுளத்திலும் பணி நியமனம் செய்து அதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி சிந்து பொது அலுவலக மேலாளர் ஐஸ்ட்டின் சாத்தப்பா ஆகியோர் உடன் இருந்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்