ராமநாதபுரம், ஜன.29 – ஆர் எஸ் மங்கலம் அருகே அனுச்சகுடி கிராமத்திற்கு பூர்வீக பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் பாரம்பரிய உரிமை கோரி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்து முறையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே அனுச்சகுடி கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை துரைராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். இவரது மறைவுக்கு பின் இக்கோயிலை சிலர் கையகப்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இக்கோயில் பாரம்பரிய உரிமை தொடர்பாக பரமக்குடி, ராமநாதபுரம் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கில் துரைராஜ் மகன் பாஸ்கரனுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை அமல்படுத்த மறுத்துவரும்
இந்து அறநிலையத்துறை திருவாடானை ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இக்கோயில் பெயரில் பொதுமக்களிடம் நன்கொடை வசூல், கையாடல் செய்த கும்பலுக்கு துணைபுரிந்த அறநிலையத்துறை திருவாடனை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனுச்சகுடி காளியம்மன் கோயில் தற்காலிக அறங்காவலர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இக்கோயிலில்
2024 அக்.12ல் திருவிளக்கு பூஜை நடத்திய பெண்கள் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுச்சகுடி கிராம பொதுமக்களின் பாரம்பரிய கோவில் நிர்வாகம், பூசாரிகள் உரிமைகள், கடமைகளை 2023 வரை நிர்வாகியாக இருந்த துரைராஜ் இறப்புக்கு முன் இருந்த நிலையை மீண்டும் அமல்ப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் நல இயக்கம்
தமிழகத் தலைவர் இளையராஜா,
இந்து ஜனநாயக பேரவை தமிழகத் தலைவர் அண்ணாத்துரை, இந்து முன்னணி தேவகோட்டை நகர் தலைவர் சுரேஷ், நகர் பொதுச்செயலாளர் மாரியப்பன், இந்து ஜனநாயக பேரவை இளைஞரணி திருவாடானை ஒன்றியத்தலைவர் தனுஷ் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முயன்றனர். அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம், நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் உரிமையை மீட்டுத் தர வேண்டும், கோயிலை ஆக்கிரமித்துள்ளோர்களால் அனுச்சக்குடி கிராம மக்களிடம் நிலவும் அச்சுறுத்தலை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முறையிட்டனர்.
இப்பிரச்னை தொடர்பாக மீண்டும் துரித விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என திருவாடானை வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினர்