நாகர்கோவில் செப் 4
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் அரசு விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என சுமார் 150 க்கு மேற்பட்ட பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டு பணி ஏற்பளிப்பு கிடைக்காமல் ஊதியம் இன்றி உழைத்து வருவோர் நிலை குறித்து எடுத்துரைத்தனர்.
29.03.2023 நாளிட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறையினைப் பின்பற்றி அத்தகையோருக்கு உடனடியாக பணி ஏற்பளிப்பு வழங்கிட வேண்டும்.
பணி ஏற்பளிப்பு வழங்க இயலாதாயின்
கருத்துருக்களை உரிய காரணங்களுடன் திருப்பிட வேண்டும்.
பல ஆண்டுகளாக கோப்புகள் கிடப்பில் இடப்படுவதால் தொடர்புடையோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
பணியேற்பானை
கிடைக்காத நிலையில் பல்வேறு ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்று அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெற்று வந்தும் அதன் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருப்பது வருத்தத்திற்குரிய செயல் என்று எடுத்துக் கூறினர்.
கல்வித்துறையின்
தவறான அணுகுமுறையே இதுபோன்று வழக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமாகிறது.
எனவே விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி ஏற்பாணை உடனடியாக வழங்கிட வேண்டும்.
எவ்வித ஊதியமும் இன்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஆசிரியர்களும் அலுவலர்களும் உள்ளனர். ஊதியமின்றி பணியாற்றி
இந்த ஆண்டு பணி நிறைவு பெறக்கூடியவர்களும் உள்ளனர்.
தேவையற்ற காரணங்களை கூறி அவர்களை அலைக்கழிக்கும் போக்கை மாவட்ட கல்வித்துறை கைவிட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட்ட ஆசிரியர் அலுவலர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை என்பதையும்
எடுத்துரைத்தனர். வரும் பத்து தினங்களுக்குள் விதிகளுக்கு உட்பட்ட தகுதியான நியமனங்களுக்கு ஏற்பளிப்பு வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ரைமண்ட், மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்,
மாவட்ட பொருளாளர் சாந்த சீலன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மார்த்தாண்டம் கல்வி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், நாகர்கோவில் கல்வி மாவட்ட பொருளாளர் ஏடன் மைக்கேல், முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் கனகராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகளான நிகிதா, யானிட் தேவ லெஜினா, அருள் வாசகர், ரஞ்சித், சுனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.