ஈரோடு நவ 12-
ஈரோடு மாவட்டம் சென் னிமலை வட்டாரம் வெள்ளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கொங்கு பொறியியல் கல்லூ ரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காச நோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு. மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு
முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத் துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவல ரின் அறிவுறுத்தலின்படி
நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம் நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்பு கள், காச நோய்க்கான இல வச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங் கள், காச நோய்க்கான பரிசோ தனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், ஆரம்ப நிலை காசநோய் அறிகுறி கள் கண்டறிவதின் முக்கி யத்துவம், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்ப டும் தீங்குகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதா யத்தின் சீர்கேடுகள், புகை யிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச் சல் பரவும் விதம். கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறை கள், காய்ச்சலுக்கு சுய மருத் துவம் தவிர்த்து மருத்துவம னையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம். கொசு உற்பத்தி தடுப்பில் மாணவர்களின் பங்கு, மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாப்பான குடி
நீரின் அவசியம். பாதுகாப் பற்ற குடிநீரால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்க மாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட துணை இயக்கு னர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகா தார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, காச நோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் லோகநா யகி, கல்லூரி முதல்வர் முனைவர். பாலுசாமி. கல் லூரி விரிவுரையாளர்கள் முனைவர். பழனிசாமி, முனைவர். கண்ணன், முனை வர் கிருஷ்ணராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ராகுல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 350 பேர்கள் கலந்து கொண்ட னர் . இறுதியாக புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்து
கொள்ளப்பட்டது.