நாகர்கோவில் அக் 14
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பிற்கு கௌரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள பால பிரஜாபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினார்கள்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் துணை அமைப்பாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவருமான முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது:-
மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பில் கௌரவ தலைவராக பால பிரஜாபதி பொறுப்பேற்று கொண்டமைக்கு மரியாதை நிமித்தமாக சுவாமி தோப்பில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை கூட்டமைப்பினர் பாலபிரஜாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
இக் கூட்டத்தில் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகளான அல்காலித், வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர், எட்கர், கிறிஸ்டி ரமணி, தாமஸ் பெர்னான்டோ , பொன்னுலிங்க ஐயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பின் அமைப்பாளர் அண்டன் கோம்ஸ் தனது கருத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவித்தார்.
என அவர் தெரிவித்துள்ளார்.