சிவகங்கை ஜூன் -27
சிவகங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அதன் விழிப்புணர்வு பிரச்சாரம் காவல்த்துறையின் சார்பில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை சிவகங்கை போலீஸ் எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் போலீஸ் எஸ். பி .சைக்கிளில் மாணவர்களுடன் பங்கேற்று ஊர்வலமாக வந்தார். இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தது .பேரணியில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கு கொண்டனர். பேரணியின்போது மாணவ மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி கோசமிட்டவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியை சிவகங்கை நகர் மக்கள் வெகுவாக பாராட்டினர் .