கிருஷ்ணன்கோவில், அருள்மிகுகலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,நாட்டு நலப்பணி திட்ட சார்பில் ,முதலாண்டு மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் முனைவர்எஸ்.கோபால
கிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் சரக காவல்துறை ஆய்வாளர் கே.ராதா மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,
மாணவர்கள் போதைப்பழக்கங்கட்கு அடிமையாகாமல், சாதனையாளர்களை முன்மாதிரியாகக் கொண்டு அந்த துறைகளில் முன்னேற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியர்கள் பி.பாண்டியராஜ்,கே.ராதா,எஸ்.கருப்பசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.