தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் போதை இல்லா இளைஞர்கள் உருவாக்குகின்ற வகையில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் தலைமை வகித்தார். செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் புதிய பாஸ்கர் முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில்
கல்லூரி பொறுப்பு முதல்வர்
மாரியப்பன்
முதலாம் ஆண்டு துறை தலைவர் சுடலைமுத்து
தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன் செந்தில்குமார்
சுபேதார் கே எஸ் என் ராவ் நாட்டு நல பணி திட்ட
அலுவலர் கருப்பசாமி மற்றும் 80 தேசிய மாணவர் படை மாணவர்களும்
150 என் எஸ் எஸ் மாணவர்களும் பங்கேற்று பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.