பூதப்பாண்டி – ஜன -21-
பூதப்பாண்டியை அடுத்துள்ள எட்டாம டை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (48) மரம் வெட்டும் தொழிலாளி இவர் கழிந்த 16-ம் தேதிமாலை சுமார் 4.30 மணியளவில் இவரது பைக்கில் இவரும் இவருடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அழகிய பாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரும் போகும் போது கேசவன் புதுரை அடுத்த போத்தியூர் பகுதியில் சாலை ஓரமாக நின்ற மின்சார கம்பத்தில் பைக் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர் இதில் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்ற இருவரும் பலத்த காயமடைந்து ஆபத்தான முறையில் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் நேற்று இறந்துள்ளார்இது குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்