நாகர்கோவில் ஜூலை 8
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில் .. திருமண தடை, குழந்தை பாக்கியம் வேண்டி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய வழிப்பாடு தலமாகும். இக்கோவில் வளாகத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு மஞ்சள் பொடி, உப்பு, பால் போன்ற பொருட்களால் நேரிடையாக பக்தர்களே அபிஷேகம் செய்து பரிகாரங்களை வேண்டி கொள்வது வழக்கம் . அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பகதர்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் கொண்டு அபிஷேகங்கள் செய்தனர் நீண்ட வரிசையில் நின்று வேண்டுதல் பரிகார பூஜைகளை செய்தனர்.