கன்னியாகுமரி ஜன 13
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் வாரியூர் மணிகண்டன், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ஜோஸ் திவாகர், ஆசிரியர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் சாம்ராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அஞ்சு கிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகிஇளங்கோ தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியை என்.எஸ்.லதா நன்றியுரை வழங்கினார்.