வேலூர்=19
வேலூர் மாவட்டம் வேலூர் நகர், டாக்டர். அம்பேத்கார் நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் மோகன் குமார் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சி மேயர் அவர்கள் சிறப்புரையாற்றினார். 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக ஆசிரியை . லாவண்யா நன்றியுரை ஆற்றினார்.