தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதைபோல் செம்பனார்கோவில்
கீழமுக்குட்டியில் உள்ள அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், செல்வமணி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக் , அமிர்த விஜயகுமார், தலைமை பொது குழு உறுப்பினர் வின்சென்ட், மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.