நாகர்கோவில் செப் 16
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி, தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த பெருமை பேரறிஞர் அண்ணாவிற்கு மட்டுமே உண்டு. தென்னாட்டு பெர்னாட்சா என்று போற்றி புகழப்படும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த தினமான நேற்று நாகர்கோவில், வடசேரியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா திரைப்படங்கள் வாயிலாக பகுத்தறிவு கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பியவர். 1962-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் படி அரிசி திட்டம் போன்ற மக்கள் முன்னேற்ற திட்டங்களை தந்தவர். அவர் பெயரிலையே புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் கொள்கையை தந்தவர் பேரறிஞர் அண்ணா
இந்நிகழ்ச்சியில் கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நரசிங்கமூர்த்தி, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு(எ) ஜெயச்சந்திரன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் சி.ராஜன், கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஸ்ரீலிஜா, மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெஸீம், முத்துக்குமார், தாமரை தினேஷ், ராதாகிருஷ்ணன், பொன்.சுந்தர்நாத், வீராசாமி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பேராசிரியர் நீலபெருமாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயாகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ரசாக், மாவட்ட டாஸ்மாக்பிரிவு செயலாளர் மணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பூங்கா கண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன், ஞாலம் ஜெகதீஸ், வேலாயுதம், ரோகிணி அய்யப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.