திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர்
திருச்சித்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் அருண் பிரசாத், வழக்கறிஞர் பிரபு, மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரட்சியாளர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவ படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் மேலும் இந்நாளை தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக ஏற்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் தொகுதி செயலாளர் பொன்னர், மகளிர் மாவட்ட அமைப்பாளர் சவரியம்மாள் , துணை அமைப்பாளர் திவ்யா, தேவி, தொழிலாளர் விடுதலை முன்னணி இயக்க மாவட்ட அமைப்பாளர் மரியராஜ், துணை அமைப்பாளர் தமிழ் வளவன், சுப்பிரமணி, மாநகர பொருளாளர் சா.பால்ராஜ், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பாபு, கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சின்ராஜ்
மற்றும் 100 மேற்பட்ட கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.