சுசீந்திரம் செப்.16
சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமத்தில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியவர்களுக்கான பழமையான கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ஓணத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாதாரணை கலசபூஜை நடைபெற்றது. மதியம் உள்ளூர் மற்றும் வெளியூரிலும் இருந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார். பின்பு கோவிலுக்கு சென்று கோயில்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார் அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும் போது பக்தர்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்குவது தனி நபரிடம் வழங்க வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகத்திடம் நன்கொடைகளை வழங்கி முறையாக ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனியாரிடம் நன்கொடை வழங்குவதால் முறையாக கோவிலுக்கு அந்த நன்கொடை செல்வதில்லை எனவும் கூறினார். பின்பு பக்தர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறைகட்டிட வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி கோவிலுக்கு அருகே கழிவறை கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க கூறினார். அவருடன் தேரூர் பேரூர் செயலாளர் முத்து திமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர் அருண்காந் கோவில் ஊழியர்கள் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு காலை முதலே வந்து சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் உண்டு சென்றனர்.