நாகர்கோவில் – செப்- 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி தலைமையில் வடக்கு பகுதி தலைவர் டேவிட் சேவியர் வடக்கு பகுதி செயலாளர் ஸ்ரீ லிஜா வட்டச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் சங்கத் தலைவர் ஸ்டீபன் வரவேற்க்க கூட்டம் தொடங்கியது கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
அதில் கௌரவ தலைவராக வட்ட செயலாளர் ராஜேஷ், தலைவராக பிரிட்டோ செயலாளராக பீட்டர், பொருளாளராக ராபின்சன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் சங்க வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் வட்ட பிரதிநிதி ஜாண் ரவி அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ் குமார் ஆட்டோ பிரிவு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, ஆட்டோ பிரிவு மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஆட்டோ பிரிவு மாவட்ட துணைத் தலைவர் நடேஷ் , மற்றும் சங்க உறுப்பினர்கள் அருள் , யோகேஷ் ஸ்ரீ செல்வின் , ராஜ், புஷ்பராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.