மதுரை ஜூன் 12,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1433 ம் பசலி ஆனி ஊஞ்சல் உற்சவம் 12-06-2024 முதல் 21-06-2024 முடிய மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது (வைகாசி 30 ந்தேதி முதல் ஆனி 7 ந் தேதி முடிய) இதில் 12-06-2024 முதல் 21-06-2024 முடிய சேத்தியில் அபிஷேகம் முடிவுற்று அலங்காரங்கள் நடைபெற்று மாலை 08.00 மணிக்கு மேல் திருவாட்சி மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் உற்சவங்கள் நடைபெற்று அதன் பின்பு இத்திருக்கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்து சேத்தியில் சேரும்.
21-06-2024 அன்று உச்சி கால பூஜையின் போது முக்கனிகள் வைத்து பூஜைகள் முடித்து தீபாரதனைகள் முடிவுற்று சிம்மாசனத்தில் புறப்பாடு செய்து இரவு 7 மணிக்கு மூன்று ரத வீதிகளில் வலம் வந்து இரவு திருக்கோயிலை சென்றடையும் மேற்கண்ட ஆனி ஊஞ்சல் திருவிழா 12-06-2024 முதல் 21-06-2024 முடிய உள்ள நாட்களில் இத்திருக்கோயிலில் தங்கரத புறப்பாடுகள் நடைபெறாது. என் கோவில் நிர்வாக துணை ஆணையர்/நிர்வாக அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.