தஞ்சாவூர், ஆகஸ்ட் 22
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில்
வயதான ஒரு முதிய ஆண் நபரின் இதயவால்வில் இருந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி–TAVI சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
இச்செயல் முறையின் சிறப்பான பலன்கள் குறித்து விளக்கமாக பேசிய டாக்டர். கேசவமூர்த்தி
இதய தமனிகளில் உருவாகியிருக்கும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெண்ட் பொருத்துதல் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல் உத்தியாகும் இதயவால்வில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு இதே செயல் உத்தியை இம்மருத்துவமனை டெல்டா பிராந்தியத்தில் பயன்படுத்தியிருப்பது, குறிப்பிடத்தக்க சாதனையாகும்
டெல்டா பகுதியில் பெற்றிருக்கிற மூன்றாவது நபராக ராமநாதன் என்ற இந்நோயாளி இருக்கிறார். கடுமையான இதயவால்வு அடைப்பு இவருக்கு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலைக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை வழக்கமான சிகிச்சை முறையாக இருக்கின்ற நிலையில் இவரது முதிர் வயதின் காரணமாக TAVI பொருத்தும் செயல்முறையை மருத்துவ நிபுணர்கள் குழு தேர்வு செய்தது.
அதன் பின்னர்
இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு நிபுணரான டாக்டர். கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த தனிச்சிறப்பு வாய்ந்த செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக இதய செயல்பாட்டை நிறுத்துவதற்கான அவசியமோ அல்லது செயற்கை சுவாச சாதனத்தோடு நோயாளியை இணைப்பதற்கோ அவசியம் இருக்கவில்லை. முழு செயல்முறையும் பொது மயக்க மருந்து பயன்பாடின்றி செய்து முடிக்கப்பட்டது
என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது
இருதய மருத்துவர்கள் சீனிவாசன், சபரிகிருஷ்ணன், மருத்துவ துணை கண்கானிப்பாளர் டாக்டர். பிரவீன், பொது மோலாளர் டாக்டர். பாலமுருகன் மற்றும் மார்க்கெட்டிங் துறை பொதுமேலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.