திருப்பத்தூர்:ஜூலை:31, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் க. மோகன் காந்தி வரலாற்று ஆசிரியர் காணி நிலம் முனிசாமி வாணியம்பாடியினை சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆடியோ மேற்கொண்ட கள ஆய்வின் பழங்கால போர் வாள்கள் இரண்டினை கண்டெடுத்தனர்.
இது குறித்து முனைவர் க மோகன் காந்தி கூறியதாவது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் துறையில் பயிலும் மாணவர் மோனிஷ் தன்னுடைய பார்ட்டி வரலாற்று சிறப்புமிக்க போர்வாளர்களை பாதுகாத்து வருகிறார் என்று கூறிய தகவல்களைத் தொடர்ந்து வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பொன்னேரி அடிவார நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி அமை எழில் அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம் அமை எழில் அவர்கள் தான் பாதுகாத்து வந்த 3.4 செ.மீ நீளமுள்ள கைப்பிடிகளோடு கூடிய இரண்டு போர்வாள்களை எங்களிடத்தில் ஒப்படைத்தார் இந்த போர் வாழ்வில் இரண்டும் தன்னுடைய தந்தையார் அர்ஜுனன் கவுண்டர் பாதுகாப்பு கொண்டதாகவும் அவருக்கு முந்திரிந்து அவரின் முன்னோர்கள் போர்வாள்களை பாதுகாத்து வருவதாகவும் தகவல்களைச் சொன்னார் போர்வைகளில் ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் பெ. வெங்கடேசன் காட்டிய போது இந்த போர்வாளர்கள் டிபி 16ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாக கூறினார். இப்போர்வாள்கள் தமிழரின் பண்பாட்டு வரலாற்றை எடுத்துரைப்பதாக உள்ளனர் “வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்ற புறநானூற்று 312 வது பாடலை பொன்முடியார் என்னும் புலவர் பாடியுள்ளார். இதே பாடலில் ஒளிருகின்ற வலிமையுடைய விலைக் கொண்டு பகைவரின் யானைகளை வெற்றி வீழ்த்தி விட்டு வருவது தமிழ்நாட்டு இளம் போர் வீரர்களின் வீரம் என்றும் அப்புலவர் பாடுகிறார். இப்பாடலைப் போல பல சங்க இலக்கியப் பாடல்கள் வலியுறுத்துகின்றன. சங்க இலக்கிய நூல்களான புறநானூறு , பதிற்றுப்பத்து உள்ளிட்ட நூல்கள் போர் கலைகளைப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே பேசுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பினை உருக்கிப் போர் தொழிலில் சிறந்த இரும்பு கொல்லர்களும் , இளம் போர் மறவர்களும் இருந்த நாடாகத் தமிழ்நாடு விளங்கி இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகப் பல்லவர்கள் , பிற்கால சோழர்கள், சம்புவராயர்கள் விஜய நகர பேரரசின் ஒரு பிரிவான நாயக்க மன்னர்கள், முகமதிய மன்னர்கள் ஐரோப்பியர்கள் என வலிமையுடைய அரசாட்சித் தமிழகத்தில் நடந்திருக்கிறது. வட தமிழகத்தின் ஒரு பகுதியான வாணியம்பாடி ஊர் வனபாலாற்றின் கரையில் அமைந்திருக்க வளம் மிக்க ஊராகும். ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்கள் வாணியம்பாடி அருகே உள்ளன. மேலும் நாயக்கர் , முகமதியர் ஐயோரிப்பிர் ஆகிய வேற்றுமொழி பேசும் மன்னர்களால் அடிக்கடி வாணியம்பாடி சந்தித்திருக்கிறது. அதன் விளைவாக போர்த்தொழில் செய்யும் சிறந்த வீரர்களாக இப்பகுதியில் வாழ்ந்திருப்பர். இதனை எடுத்துரைக்கும் விதத்தில் கைகளில் போர்வாள்களை வைத்திருக்கும் ஏராளமான நடுகற்கள் இஇப்பகுதியில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது . நடுகற்களில் குறிப்பிடப்படும் போர்வாள்கள் இரண்டும் இரும்பினால் செய்யப்பட்டுத் தரமாக கிடைப்பது இதுவே முதல்முறை மேலும் இப்பகுதியில் நடைப்பெற்ற போர்களையும் இவ்வாள்கள் நினைவுப்படுத்துகின்றன. இது போன்ற பல அரிய வரலாற்றுத் தரவுகளை எங்களுடைய ஆய்வுக் குழு கடந்த 15 ஆண்டுகளாக கண்டறிந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்து வருவது சிறப்புக்குரியது என்று பேராசிரியர் க.மோகன்காபந்தி கூறினார்.