கிருஷ்ணகிரி மாவட்டம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த இணையவழி கலந்தாய்வு கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து கலந்துகொண்டது, சென்னையில் உள்ள இயக்குநர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கலந்தாய்வின் நோக்கத்தை அறிந்துகொண்ட அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” போன்ற திட்டங்களை அதிகளவில் மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் 6T60T அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அதன் அருகில் இருந்த தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலை குறித்தும், மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம் குறித்தும், அலுவலர்களின் கோரிக்கைகள் குறித்தும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கேட்டறிந்தார்.