ராமநாதபுரம், பிப்.27-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் நடந்த 87வது ஆண்டு விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் சார்பில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநிலச் செயலாளர் சாதிக் பாட்சா அன்பாசிரியர் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் சக ஆசிரியைகளுக்கு பேரூர் தலைவர் காதர், மமக செயலாளர் பரகத் அலி,தமுமுக செயலாளர் மைதீன் பிச்சை , துனை தலைவர் அலாவுதீன் மாவட்ட மமக துணை செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, ஊடக பிரிவு மாவட்டசெயலாளர் பஹுருல்லாஹ் மாவட்ட மகளிர் பேரவை பொருளாளர் கவுன்சிலர் சமீமா பானு, மாவட்ட மகளிர் பேரவை தலைவி சரிபா ஜைனுல் ஆபிதீன் கிழக்கு பகுதி தலைவர் இபுராஹிம் அப்துல் ரஹிம் நிசார் ஜலால். பவுசல் ஆகியோர் அறிவொளி விருது வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வில் தொண்டி பேரூர் தமுமுக மமக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.