திண்டுக்கல் ஜுன் :27
திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆதிதிராவிட பழங்குடியினர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், பெண்களின் சுய தொழில் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி வழங்கி வருகிறேன். பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிட நலத்துறை மூலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் பாரதமாதா பவுண்டேஷன் நிறுவனர் எம்.ஆனந்தகுமார் சீரிய முயற்சியின் மூலம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் ஆதரவற்ற பெண்கள், கைப்பெண்களும் தொழிற் பயிற்சி மூலம் ஊக்கப்படுத்தி வாழ்க்கை மேம்பட தொடர்ந்து சேவைப்பணி பணியாற்றி வருகிறார்.
சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிலையான இருப்பிட ஆதாரம் ஏற்படுத்துதல்
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட குடும்பப பெண்கள், 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி அரசு உதவியுடன் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தந்ததன் மூலம் அவர்களது நிலையான இருப்பிடத்திற்கான ஆதாரத்தை உருவாக்கித் தந்துள்ளேன். வாழ்விலும் சமுதாயத்திலும் பின் தங்கியுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
வயது முதியோர் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைப்பெண்கள் உதவித்தொகை பெற்றுத் தருதல்
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சியில் உள்ள ஏழை எளிய முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசின் கைப்பெண்களுக்கு உதவித்தொகையை சுமார் 100 க்கும் மேற்பட்டோர்க்கு பெற்றுத்தந்து உதவி புரிந்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊராட்சியில் உள்ள பெண் குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான ரூ.50,000/-, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால், அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 நிறைவடைந்தவுடன், வட்டியுடன் வயது சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்பட்டு வருகிறது போன்ற விவரங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பெற்ற குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.இவர் சேவையை பாராட்டும் விதமாக தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர். ஐ.பெரியசாமி ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தியுள்ளார்கள்.